• Home
  • தமிழ்நாடு
  • விபத்தில் தந்தை இழந்த மாணவருக்கு ரூபாய் 75 ஆயிரம் ஒப்பளிப்பு ஆணை வழங்கல்.
தமிழ்நாடு

விபத்தில் தந்தை இழந்த மாணவருக்கு ரூபாய் 75 ஆயிரம் ஒப்பளிப்பு ஆணை வழங்கல்.

Email :89

விபத்தில் தந்தை இழந்த மாணவருக்கு ரூபாய் 75 ஆயிரம் ஒப்பளிப்பு ஆணை வழங்கல். அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு அரசு வழங்கும் நிதி  ரூபாய் 75 ஆயிரத்திற்கான ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டது. வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு ரூபாய் 75 ஆயிரம்  வழங்குகிறது. தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு முதலீட்டு தொகையில் கிடைக்கும் வட்டியானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பாதுகாவலரின் வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்படும். மேலும் உயர் கல்வி படிக்கும்போது மூன்று தவணையாகப் பிரிக்கப்பட்டு மாணவர்களது கல்லூரிகளுக்குப் பணம் வழங்கப்படும். மேற்கண்ட உதவித்தொகை பெறும் மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முதல் தகவல் அறிக்கை, பிரேதப் பரிசோதனை

அறிக்கை,வாரிசு சான்றிதழ்,படிப்புச் சான்றிதழ், பாதுகாவலர் மாணவர் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகம், வட்டாட்சியர் சான்று இவற்றையெல்லாம் பெற்று 5 பிரதிகள் சமர்ப்பித்தல் வேண்டும். அதனை வட்டாரக்கல்வி அலுவலர்கள் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஒப்பளிப்பு ஆணை வழங்கப்படுகிறது. இந்நிலையில்  கடந்த ஆண்டு சாலை விபத்தில் தந்தையை இழந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ரித்தீஷ்க்கு  75 ஆயிரத்திற்கான ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டது. கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) முருகேசன் ஆணைப்படி வட்டாரக்கல்வி அலுவலர் பாண்டித்துரை, சதீஷ்குமார் ஆகியோர் சாலை விபத்தில் தந்தையை இழந்த மாணவர் ரித்தீஷ்க்கு ரூபாய் 75 ஆயிரம் நிதிக்கான ஒப்பளிப்பு ஆணையை வழங்கினர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை தந்து காக்கும் தமிழக அரசிற்கும், மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) முருகேசன் அவர்களுக்கும், பரிந்துரைத்து ஆணைகளை வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார் மாவட்ட,வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கும் தலைமை ஆசிரியர் சாகுல் அமீது உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts