இன்று 24.11.2024 மாலை 4:30 PM மணிக்கு மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஆலோசனை கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் புதிய உறவுகள் பலர் கலந்து கொண்டனர். இனி வரும் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்றும் மாத சந்தா ரூபாய் 100 செலுத்த வேண்டும் என்றும் வளர்ச்சி நிதி அவர்கள் விரும்பும் தொகையை செலுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அத்துடன் மருத்துவ முகாம் நடத்துவது என்றும் எந்த பகுதியில் நடத்தலாம் என்று கலந்தாலோசிக்க பட்டது.

இனி வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட அனைவரும் ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தார்.
இதில் கலந்து கொண்ட மாநில ஆலோசனை குழு தலைவர் திரு தயாளன் மற்றும் திருச்சி மாவட்டச் செயலாளர் திரு கொளஞ்சியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி ரேகா, திருமதி காயத்திரி,திருமதி கடலரசி, திருமதி செண்பகவல்லி,திருமதி கவிக்குயில், திருமதி லதா ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக அமைப்பின் நிறுவன தலைவர் திரு T.செல்வராஜ் நன்றியுரை கூறினார்.












