திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் தபால் தலை சேகரிப்பாளர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன், தஞ்சை காசிநாத், பொருளாளர் தாமோதரன், இணை பொருளாளர் மகாராஜா, ரமேஷ், மாதவன், முகமது சுபேர், சந்திரசேகரன், சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்திய அஞ்சல் துறையின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள
தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய அஞ்சல் கோட்டம் சார்பில் தபால் தலை கண்காட்சி அக்.8, 9 தேதிகளில் ‘களஞ்சியம்’ என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக் கழக கரிகாலச் சோழன் கலையரங்கத்தில் நடைபெற்றது. கண்காட்சியில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான தபால் தலை சேகரிப்பாளர்கள் தபால் தலை

சேகரிப்புகளை காட்சிப்படுத்தினர்.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் பல்வேறு தலைப்பில் தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தியிருந்தனர். பாய் மரக்கப்பல் வரலாறு தலைப்பில் காட்சிப்படுத்தியிருந்த லால்குடி விஜயகுமார் வெர்மெயில் பதக்கமும் , பர்மாவில் பயன்படுத்திய பிரிட்டிஷ் இந்தியா அஞ்சல் உறைகள் தலைப்பில் நாசர் வெர்மெயில் பதக்கமும்,
கப்பல் கருப்பொருளில் காட்சிப்படுத்திய காசிநாத் வெள்ளிப் பதக்கமும்,

திருச்சிராப்பள்ளி சிறப்பு அஞ்சல் உறைகள் தலைப்பில் முத்து மணிகண்ட கார்த்திகேயன் வெள்ளி பதக்கமும், மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றை அஞ்சல் தலை சேகரிப்புக் கலை மூலம் எடுத்துரைத்த தாமோதரன் வெள்ளி பதக்கமும், தேவகி வெண்கல பதக்கமும், தஞ்சை பெரிய கோவில் தலைப்பில் காட்சிப்படுத்திய சதீஷ் பாபு நடுவரின் சிறப்பு பரிசையும் பெற்றனர். போட்டியில் பங்கேற்ற விஜயகுமார், தஸ்லிமா நஸ்ரின் உட்பட பலர் பங்கேற்றமைக்கான சான்றிதழையும் பெற்றனர். தபால் தலை கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் பிளாட்டலிக் கிளப் சார்பில் நிர்வாகிகள் சிறப்பித்தனர்.












