• Home
  • தமிழ்நாடு
  • தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி திருவானைக்காவல் அரசு கிளை நூலக வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு

தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி திருவானைக்காவல் அரசு கிளை நூலக வளாகத்தில் நடைபெற்றது.

Email :287

திருச்சிராப்பள்ளி, திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம், நடத்திய 57ஆவது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி

இன்று 20.11.2024 மாலை 5.30 மணி அளவில் திருவானைக்காவல் அரசு கிளை நூலக வளாகத்தில் (26.பர்மா காலனி, திருவானைக்காவல் ) நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, திருவானைக்காவல்,  தலைமை ஆசிரியர் திரு. பா. மருதவாணன் அவர்கள் “வளம் தரும் நூலகம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசிரியர் திரு. சதீஷ்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கி, மாணவர்களுக்கு வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் சிறப்பாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் மாணவர்கள் மட்டும் அல்லாமல் பெற்றோர்களும் வருகை புரிய வேண்டும் மற்றும் வாசிப்பு பழக்கத்திற்கு எடுத்துக்காட்டாக

பெற்றோர்கள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். கிளை நூலகர் நன்றி உரை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் வாசகர்கள், தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற மகிழ்வில், கிளை நூலகர் மற்றும் வாசகர் வட்ட தலைவர் திரு. விஸ்வேஸ்வரன், திருவானைக்காவல், திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts