தமிழ்நாடு

அருள்மிகு காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

Email :117

திருவானைக்காவல் சன்னதி வீதியில் அருள்பாலிக்கும் அருள்மிகு காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று 05.12.2024 காலை 11.15 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

பூசாரியார்.திரு.சுப்ரமணியம் தலைமையிலும்  உள்ளூர் முக்கியஸ்தர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.

இங்கு கோயில் உள்ள இடத்தில் இரணியனை வதம் செய்த காளி அம்மன் சித்திர வடிவில் இருந்து வருவது சிறப்பாகும். ஊரின் எல்லை தெய்வம் பிடாரியார் இரணியம்மன் அம்சமான காளி பல அற்புதங்களை நடத்தி வருவது இவ்வூரில் அனைவரும் அறிந்ததே.
வி.வே.விஸ்வேஸ்வரன்
திருவானைக்காவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts