• Home
  • தமிழ்நாடு
  • இரண்டு நல்ல உள்ளங்களுக்கும் தின சேவை அறக்கட்டளை மற்றும் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏
தமிழ்நாடு

இரண்டு நல்ல உள்ளங்களுக்கும் தின சேவை அறக்கட்டளை மற்றும் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏

Email :112

30.11.24 இன்றைய தினம் சென்னையில் இருந்து நாங்கள் நான்கு நபர்கள் காரில் வந்து கொண்டிருந்தோம். அதில் மூன்று பேர் மாற்றுத்திறனாளி. அதிலும் வண்டி இயக்கியவர் அவரும் மாற்றுத்திறனாளி இந்த சூழ்நிலையில்  சென்னையிலிருந்து திருச்சி வரும் வழியில் வேப்பூர் பக்கத்தில் எங்களின் வாகனம் பழுதடைந்து நின்று விட்டது மாலை ஆறு மணி அளவில் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அப்பொழுது சில நபர்களிடம் உதவி கேட்டோம். அவர்களும் உதவியை செய்வதற்கு அங்கங்கே முயற்சி செய்து கொண்டிருந்தனர். யார் என்று தெரியாது அப்பொழுது கடவுள் போல் வந்து உதவிய திரு.கருப்பசாமி மற்றும் திரு. ஏழுமலை என்பவர்கள் வந்து வண்டியை பழுதினை சரி செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தார்கள். இந்த உதவி செய்த அந்த இரண்டு நல்ல உள்ளங்களுக்கும் தின சேவை அறக்கட்டளை மற்றும் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். உதவி செய்த நண்பர்களின் விசிட்டிங் கார்டு புகைப்படத்தையும் இணைத்துள்ளோம்.


மகிழ்வில்..,
K. சிவபிரகாசம்,
திரு.சவரி ராஜ்,
திரு.விவேக்,
திருமதி. கவிதா

நன்றி.., நன்றி.., நன்றி..,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts