கரூர் நச்சலூர் அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவியல் விழா-2024 பள்ளி வளாகத்தில் நடைபெற்றது பள்ளி முதல்வர் அப்துஸ் சலாம் வரவேற்றார் அரபிந்தோ கல்வி குழும தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

துணை தாளாளர் பிரிஷிந்த் வாழ்த்துரை வழங்கினார். கல்வி ஆலோசகர் சந்திரசேகர தவே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அறிவியல் விழாவில் பள்ளிச் செயலர் பிரமிளா ரவிச்சந்திரன் முதன்மை ஒருங்கிணைப்பாளர், கிருஷ்ணவேணி,
நாணய சேகரிப்பாளர்கள் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், குடியரசு இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் குணசேகரன், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் இலங்கையை ஆண்ட சோழ வம்சத்தினர் வெளியிட்ட நாணயம் குறித்து பேசுகையில்,

இலங்கை ஆண்ட சோழ வம்சத்தினர் வெளியிட்ட நாணயம் குறித்து சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் பேசுகையில், கி.பி 993ம் ஆண்டு முதல் 1070ம் ஆண்டு வரையான காலம் சோழர்களின் ஆதிக்கத்தில் இலங்கை இருந்துள்ளது. ”ராஜராஜ சோழன் இலங்கையை கைப்பற்றிய பின் நாணயம் வெளியிட்டுள்ளார். ராஜ ராஜ சோழன் நாணயம் ஒரு வளமான வரலாற்றையும், செழிப்பான பேரரசையும் உள்ளடக்கியது. இது வெறும் நாணயம் அல்ல; வணிகம் பரந்த தொலைவில் மக்களை இணைக்கும் காலத்தை நினைவூட்டுகிறது. நீங்கள் வரலாற்று ஆர்வலராக இருந்தாலும், சேகரிப்பாளராக இருந்தாலும் சரி, இந்த நாணயங்கள் யுகங்கள் முழுவதும் கண்ட கதைகள் மற்றும் பயணங்களைப் பற்றி சிந்திக்கவேண்டும். ராஜராஜ சோழன் இலங்கையை கைப்பற்றிய பின் தங்க உலோகத்தில் 3.4 கிராம் எடையில் 20 மி.மீ விட்டத்தில் ஒழுங்கற்ற வடிவ சுற்றில் வெளியிட்டார்.

கஹவானு அல்லது லங்கேஸ்வரா நாணயங்கள்” சிங்களவர்களின் தங்க நாணயம் ‘ஹகவனு’ என அறியப்பட்டதுடன் இது கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து 8 ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டது. இவை தங்க உலோகத்தினாலும் தங்க முலாம் பூசப்பட்டும் தயாரிக்கப்பட்டிருந்ததோடு, பெறுமதிக்கு ஏற்ப “கஹவனு”, “அட் கஹவனு”, “தெஹக” மற்றும்”அக” என்றவாறு பயன்படுத்தப்பட்டுள்ளன. நாணயங்கள் கூறும் வரலாற்றை அறிந்திட மாணவர்கள் வரலாற்று நூல்களை படிக்க வேண்டும் ஒவ்வொரு நாணயமும் ஒரு வரலாற்றை எடுத்துரைக்கும் என்றார்.











