உணர்வான உறவுகளே!
உயிரான நட்புகளே! வணக்கம்.
எனக்கு தாத்தா என்ற உயர்பதவி வழங்கி என் வாழ்வை முழுமையாக்கிய எங்கள் இல்லத்து தேவதை- யாழிசையாய் முழங்கி

தேனிசையாய் அனைவர் உள்ளங்களையும் ஆண்டு வரும் இளவரசி- என் தவப்புதல்வன் கிஷோர்பாலாஜி & தமிழ்ப்புதல்வி சாத்தம்மைப்பிரியா தம்பதியரின் தலைமகள் யாழிசை இன்று (டிசம்பர்,1) அகவை ஒன்பதில் அடியெடுத்து வைக்கிறார்.
உலக வானில் இறகுவிரித்து சிறகடித்துப் பறக்கத்துடிக்கும் இந்த பெதும்பை மங்கையாகி, மடந்தையாகி, அரிவையாகி, தெரிவையாகி, பேரிளம் பெண்ணாகி- ஒவ்வொரு பருவத்திலும் கற்பவை கற்று பெறர்கரிய நற்பேறுகள் அனைத்தும் பெற்று நலத்துடன்- வளத்துடன், ஈன்றெடுத்த பெற்றோரும், இனிய உறவுகளும்- இதய நட்புகளும் போற்ற – தலைமுறை தழைக்க, மாநிலம் பயனுற வாழ்ந்து சிறக்க இவ்வினிய நாளில் இனிதே வாழ்த்தி மகிழ்கிறேன். வானிலிருந்து என் இல்வாழ்க்கைத் துணைவி கமலா தன் பெயர்த்திக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறார்.தங்கள் கனிந்த வாழ்த்தும் என் பெயர்த்தி யாழிசைக்கு இனிமை சேர்க்கட்டும்.
பாசத்துடன் யாசிக்கும்:
உங்கள் உறவான வீ. கோவிந்தசாமி.













