57 ஆவது தேசிய நூலக வார விழா கொண்டாடும் விதமாக ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி நூலகத் துறை திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்துடன் இணைந்து “எனக்கு பிடித்த புத்தகம்”

எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியை, திருவானைக்காவல் பகுதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடத்தியது. இதில் பள்ளி தலைமையாசிரியர் திரு.மருதவாணன் அவர்கள் தலைமை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
பள்ளி மேலாண்மை குழு (கல்வியாளர்) உறுப்பினரும் திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்ட தலைவருமான வி.வே. விஸ்வேஸ்வரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
கல்லூரி நூலகத்துறை தலைவரும் கலைப் புல முதன்மையருமான முனைவர் ச. லெஷ்மி அவர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.


கல்லூரி நூலகத்துறை பேராசிரியை முனைவர் மஞ்சுளா அவர்களும் பள்ளித் தமிழ் ஆசிரியர் திருமதி சிவகாமி அவர்களும் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்து அறிவித்தனர். உதவி தலைமையாசிரியர் (பொ) ப்ரேமலதா அவர்கள் நன்றி கூறினார். ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்.












