இம்மாதம் கடந்த 18.11.2024 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள மேக்குடி பஞ்சாயத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி

மையத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் புற்று நோயிலிருந்து பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்களுக்கு புற்று நோயை பற்றிய விழிப்புணர்வு உரை திருமதி கல்பனா கிராம சுகாதார செவிலியர் அவர்கள் வழங்கினார்.

மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய ஆசிரியர் மேரி அவர்கள் நன்றி உரை கூறினார். இந்த நிகழ்ச்சியில் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் தெளிவாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாக வந்திருந்த பெண்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் 25 பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் திரு. ராபின்சன் அவர்கள் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.












