• Home
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் “சிறார் இலக்கிய விருது” எழுத்தாளர், தமிழச்சி தென்றல் வினோவிற்கு, சாகித்திய அகாதமி விருதாளர் மதிப்பிற்குரிய சா. தேவதாஸ் அவர்களால் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் “சிறார் இலக்கிய விருது” எழுத்தாளர், தமிழச்சி தென்றல் வினோவிற்கு, சாகித்திய அகாதமி விருதாளர் மதிப்பிற்குரிய சா. தேவதாஸ் அவர்களால் வழங்கப்பட்டது.

Email :495

இன்று 24.11.2024 தேனி, வாசவி மஹாலில், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையில் “சிறார் இலக்கிய விருது” அகழ் கலை இலக்கிய மன்றம், 30 சிறார்களைக் கொண்டு உருவாக்கிய “ஒரு கதை சொல்லட்டுமா?” என்ற புத்தகத்திற்கு, சாகித்திய அகாதமி விருதாளர் மதிப்பிற்குரிய சா. தேவதாஸ் அவர்களால் வழங்கப்பட்டது.

கடந்த 2022 அன்று, அகழ் கலை இலக்கிய மன்றம், குழந்தைகளுக்கான “சிறு கதை போட்டியை நடத்தியது”
அதில் “உறவுகளின் வலிமை” என்ற பொருண்மையில் கதைகள் உருவாக்க, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உறவுகள் எந்த அளவு முக்கியமானது என்று, எனக்குப் பிடித்த என் அப்பா, அம்மா, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்ற உறவுகளின் வழி, தங்களின் அனுபவத்தை, கதைகளாக பகிர்ந்தனர்.
அதனை புத்தகமாக தொகுத்து “ஒரு கதை சொல்லட்டுமா?” என்ற தொகுப்புப் புத்தகமாக வெளியீடு செய்யப்பட்டது.

அந்தப் புத்தகம் இப்போது “தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின்” “சிறார் இலக்கிய விருதினைப் பெற்றிருக்கிறது.
அந்தப் புத்தகத்தின் தொகுப்பாளராக தமிழ்ச்செம்மல் செ. வினோதினி விருதினைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ம. திருவள்ளுவர், கவிஞர்கள் அறிஞர்கள் எழுத்தாளர்கள் தமிழ் சான்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தப் புத்தகத்திற்கு கதைகள் உருவாக்கிய மாணவர்களுக்கான பாராட்டு விழா விரைவில் நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts