திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம், டிசம்பர் 2024 மாத கூட்டம், இன்று 05.12.2024 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து, திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தின் அரங்க வாழ்த்துப் பாடல், கவிஞர் லால்குடி முருகானந்தம் அவர்கள் தலைமையேற்று அனைவரும் பாடலை பாட நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
திரு.வ.ச. சிவராசன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்ச்செம்மல் வீ. கோவிந்தசாமி தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி பிராட்டியூர், செ. வெ. தேவசேனா, 9ஆம் நிலை, பெரிதினும் பெரிது கேள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி பிராட்டியூர், செ. யோகித் 10 ஆம் நிலை, பாரதியாரும் தமிழ்த் தொண்டும் என்ற தலைப்பில் உரையாடினார். வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி இரா. ஜெயலெட்சுமி, ஒரு சொல் என்னும் தலைப்பில்
சிறப்புரையாற்றினார். Lion B. முகமது ஷபி, ஆசிரியை சித்ரா, அரிமா தே.ஸ்ரீ வைகை மாலா நன்றியுரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் தலைவர் தமிழ்ச்செம்மல் வீ. கோவிந்தசாமி, செயலாளர், பன்முகக்கலைஞர் லால்குடி, த. முருகானந்தம், பொருளாளர், கவிஞர் க.மாரிமுத்து, துணைத் தலைவர்கள் ச. சண்முகநாதன், முனைவர் செ. அருணாச்சலம், மனநல மருத்துவர் லெட்சுமி


நந்தகுமார், இணைச் செயலாளர்கள், கவிஞர் வல்லநாடன் இல. கணேசன், திருமதி இரா. ஜெயலக்ஷ்மி, துணைச் செயலாளர்கள், வ.ச. சிவராசன், மன்ற ஆலோசகர்கள், முனைவர் சு. செயலாபதி, கு. வீராசாமி, செயற்குழு உறுப்பினர்கள் எம். ஆர். எஸ். கேசவன், ப. குணசீலன், வ. பன்னீர்செல்வம், வி. ராஜசேகர், சமயபுரம் அ. ராசேந்திரன், அ. நடராசன், ர. பிரபு, சீ. சத்திய நாராயணகுமார், கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாடிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் GREEN PARK LITTLE KINGDOM MONTESSORI SCHOOL, WORAIYUR, TRICHY, இப்பள்ளியின் தாளாளர் ஹேமலதா சொக்கலிங்கம், தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.











