• Home
  • தமிழ்நாடு
  • புரட்சிப் பாவேந்தர் பேரவை, நவம்பர், திங்கள் கூட்டம் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின், குளிர்மை அரங்கத்தில் இன்று 24.11.2024 மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு

புரட்சிப் பாவேந்தர் பேரவை, நவம்பர், திங்கள் கூட்டம் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின், குளிர்மை அரங்கத்தில் இன்று 24.11.2024 மாலை நடைபெற்றது.

Email :329

புரட்சிப் பாவேந்தர் பேரவை, நவம்பர், திங்கள் கூட்டம் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின், குளிர்மை அரங்கத்தில் இன்று 24.11.2024 மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி ஐயா குழந்தை ஈகவரசன் அவர்களின் இனிய பாடல்களுடன் தொடங்கியது.


முக்கியம் செ. சண்முகநாதன், தமிழவேள் பெ. உதயகுமார், முன்னிலை வகித்தனர். முனைவர் சு. செயலாபதி வரவேற்புரை ஆற்றினார். விக்னேசு வித்யாலயா பள்ளி, கூத்தூர், 12ஆம் வகுப்பு மாணவி செல்வி சு.அ. யாழினி, “புரட்சிப் பாவேந்தர்” என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்.

தமிழ்ச்செம்மல் முனைவர் ப. சுப்பிரமணியன் பாவேந்தரின் “புரட்சிக்கவி”- ஒரு பார்வை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

ஐயா குறள்மொழி அவர்கள் நிறைவுறையும் நன்றி உரையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில் புரட்சிப் பாவேந்தர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள்,  நெறியாளர்கள், செயற்குழுவினர், தமிழ்ச் சான்றோர்கள் கவிஞர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள்,

பெற்றோர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts