பொதிகை புத்தகத் திருவிழா- 2024!
தென்காசியில் மூன்றாவது பொதிகை புத்தகத் திருவிழா நவம்பர் 15 முதல் 24 வரை நடைபெற்று வருகிறது.

இப்புத்தகத்திருவிழாவில் எட்டாவது நாளாக 22. 11. 2024 தென்காசி மாவட்டம் வீரகேரளம்பது அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திருமதி மாலதி பட்டதாரி அவர்கள் எழுதி நிவேதிதா பதிப்பகம் வெளியீட்டில் வெளியான “டம்… டும்…” சிறார் நூலினை மேனாள் முதன்மைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் வெளியிட தென்காசி மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய திரு கமல் கிஷோர் ஐ.ஏ.எஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இரண்டாவது புத்தகமாக அதே பள்ளியைச் சார்ந்த 8,9 மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் 13 மாணவிகள் 23 கதைகளை எழுதியிருக்கிறார்கள் .அந்த கதைகளுக்கு 7, 8, 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர் ஓவியம் வரைந்திருக்கிறார்கள். இந்த புத்தகத்தை தேசிய நல்ல ஆசிரியர் மாலதி , இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், மற்ற மாணவர்களுக்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் கதைகளை தொகுத்து “சிறகை விரிக்கும் சிட்டுகள்” என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தான் அவர்கள்,இளம் எழுத்தாளர் சுனில் குமார் , தென்காசி நூலக அலுவலர் மற்றும் அரங்கு நிறைந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.











