கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் நங்கவரம் பேரூராட்சி சாத்தாயி அம்மன் கோவில் அருகில் உள்ள பயணியர் நிழற்குடையில் கடந்த 15 நாட்களாக சுமார் 58 வயது மதிக்கத்த மனநலம் பாதிக்கப்பட்ட ஊர் பெயர் தெரியாமல் ஆண் ஒருவர் தங்கி இருந்து வந்துள்ளார். மேலும் உண்ன உணவு தண்ணீர் இல்லாமல் அரைகுறை ஆடைகளுடனும் நிர்வாணமாகவும் சுற்றித்திரிந்து வந்ததுள்ளார்.
இதையடுத்து இது குறித்து அப்பகுதியை நங்கவரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்மேகம் என்பவர் புழுதேரியில் உள்ள மனநல காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் நங்கவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன்,மன நல சமூக பணியாளர் ஜெர்சில்லா செவிலியர் அனிதா மற்றும் மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மனநலம் பாதித்தவரை மீட்டு நங்கவரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரவண கிரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அனுமதி பெற்று கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உத்திரவின் பேரில் நல்லூரில் உள்ள தனியார்(ஹெட்ச்) காப்பகத்தில் மனநலம் பாதித்தவரை ஒப்படைத்தனர்.











