கவிக்கோ 25, 2026 டிசம்பர் 26 திருச்சிராப்பள்ளி பிராட்டியூர் தமிழக ஆயரவையின் பொதுநிலையினர் பணிக்குழு அரங்கில் நடைபெற உள்ள “கவிக்கோ : ஞானத்தால் நிறைந்த வானம்” விழாவின் இலச்சினை வெளியிடப்பட்டது.
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில்
புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி இலச்சினையை வெளியிட தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் பேராசிரியர் விஸ்வநாதன், கவிஞர் கீதா, கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி, கவிஞர் ரா.சி.பன்னீர்ச்செல்வம், தோழர் கஸ்தூரி ரெங்கன், வழக்கறிஞர் ரெங்கராஜன், கவிஞர் பீர் முகமது, முனைவர் ஜா.சலேத், திருமதி லி.மெர்சி டயானா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.














