திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று 11.12.2024 உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் Truth lab chennai இணைந்து வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பயிற்சி வகுப்பில் தடய அறிவியல் மற்றும் அதன் பயன்பாடு பற்றி விளக்க உரை அளித்தனர் பயிற்சி வகுப்பை மாண்புமிகு மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் P. V. வெங்கட், துணைத் தலைவர் சசிகுமார் இணைச்செயலாளர் விஜய் நாகராஜன் மற்றும் 300க்கும் மேற்பட்ட

வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.













