புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாமின் இறுதி நாளான இன்று 19/02/2025 மணச்சநல்லூர் கிராமத்தில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்டம் மாணவிகள் அனைவரும் பூனம் பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மாரியம்மன் குலத்தை நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் இன்று குளம் தூர்வாருதல் களப்பணியை மேற்கொண்டனர்.

குளம் சுத்தம் செய்யப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டது. மதியம் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் நிறைவு விழாவானது நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி முன்னிலையில் நடைபெற்றது. நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக
திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியின் தரம் மற்றும் செயல்பாடுகள் துறை தலைவர் முனைவர் ருஃபஸ் ஷாகின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். பி வோக் (லாஜிஸ்டிக் மற்றும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்), டி. டி. யூ. கவுஷல் கேந்திராவின் உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். ராஜ்குமார் அவர்கள் மண் மீது மனிதன், மனிதனுக்காய் இயற்கை எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பொருளாதார துறை பேராசிரியர் முனைவர் பி.மெர்லின் கோகிலா அவர்கள் முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்கும் விதமாக நல்லதொரு வரவேற்புரையை வழங்கினார். மேலும் சு. கீர்த்தனா இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையின் மாணவி நன்றியுரை ஆற்றினார். மேலும் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்

நாட்டுநலப்பணித்திட்ட மாணவிகள் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு வகுப்புகள் எடுத்தனர். விளையாட்டுப் போட்டிகள் வைத்து ஊக்கப்படுத்தினார்.நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் விநாயகர் கோவிலை தூய்மைப் படுத்தினார்கள்.
நாட்டு நலப்பணி திட்ட
சிறப்பு முகாம் ஆனது இனிதே முடிவடைந்தது.














