• Home
  • தமிழ்நாடு
  • புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமானது 12.12.2024 இன்று  “அடுத்த தலை முறைக்கான நிதி திறன்கள்” என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டத்தினை ஏற்பாடு செய்தது.
தமிழ்நாடு

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமானது 12.12.2024 இன்று  “அடுத்த தலை முறைக்கான நிதி திறன்கள்” என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டத்தினை ஏற்பாடு செய்தது.

Email :96

நாட்டு நலப்பணித்திட்டம், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி.

புனித சிலுவை  தன்னாட்சிக் கல்லூரியின்  நாட்டு நலப்பணித் திட்டமானது 12.12.2024 இன்று  “அடுத்த தலை முறைக்கான நிதி திறன்கள்” என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டத்தினை ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக திரு. ஆர். அருண் ரெங்கநாதன் (முதுநிலை மேலாளர் மற்றும் பிரிவு தலைவர், கரூர் வைஷ்யா வங்கி, திருச்சிராப்பள்ளி) அவர்கள் பங்கேற்று மாணவர்களுடன் தனது நிதி அறிவியல் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

வங்கி சேமிப்பு கணக்கு, மீளக்கூடிய வைப்பு, நிலையான வைப்பு மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகள். 
முதலீட்டு திட்டங்கள் மற்றும் பங்கு/கடன் சந்தை வழிகாட்டல்களை மாணவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில்  எடுத்துரைத்தார்.

இணைய மோசடி  விழிப்புணர்வு ,
மற்றும் ‘டிஜிட்டல் மிரட்டல்’ போன்ற புதிய சவால்கள் மற்றும் அவற்றை எதிர்க்கும் திறன்கள் குறித்தும் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு நிதி மேலாண்மையின் அடிப்படைகளை புரியச் செய்ததோடு, இணைய மோசடிகளை அடையாளம் காணும் திறன்களையும் வளர்ப்பதற்கு உந்து சக்தியாக இருந்தது.

கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி அவர்களின் தலைமையில், கல்லுரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி அவர்களின் முன்னிலையில் இந்நிகழ்வானது இனிதே நடந்தேறியது.  கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாதார துறை பேராசிரியர் முனைவர். பி மெர்லின் கோகிலா அவர்கள் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.

இளங்கலை இளம் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இளங்கலை இளம் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts