• Home
  • தமிழ்நாடு
  • சுய கற்றல் மையம்
    (SELF LEARNING CENTER)
    செலவில்லா கல்வி திட்டம்! 19.02.2025.
தமிழ்நாடு

சுய கற்றல் மையம்
(SELF LEARNING CENTER)
செலவில்லா கல்வி திட்டம்! 19.02.2025.

Email :156

சுய கற்றல் மையம்
(SELF LEARNING CENTER)
செலவில்லா கல்வி திட்டம்!
19.02.2025.

ஆக்கம்,
எஸ். சிவக்குமார், முதல்வர்( பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம். நம் குழுவில் உள்ள அனைவருக்கும் மூளையின் முக்கியத்துவத்தை அடிக்கடி நான் வலியுறுத்தி வருவதை கேட்டு இருப்பீர்கள். தற்போது திரு இறையன்பு, IAS அவரது காணொளியை பாருங்கள். ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் தாங்கள் வித்தியாசமாக பார்த்ததை நோட்டில் எழுத சொல்லுங்க. பிறகு வகுப்பில் விவாதிக்க வேண்டும். அனைத்து குழந்தைகளும் ஒரே நாளில் அவ்வாறு செய்ய மாட்டார்கள். ஆனால் ஒரு குழந்தை மட்டும் கண்டிப்பாக செய்யும். பிறகு அதனைப் பார்த்து மற்ற குழந்தைகளும் செய்ய தொடங்கும். இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக வகுப்பறையில் செய்து வந்தால் குறிப்பு எடுக்கும் பழக்கம் குழந்தைகள் மத்தியில் ஏற்படும். இதனை இந்த வார செயல்பாடாக செய்து குழுவில் பகிர வேண்டும். காணொளியை முழுமையாக பார்க்க வேண்டும். காணொளியில் கண்டதை சிறு நாடகமாக உருவாக்கி வகுப்பில் குழந்தைகளை நடிக்க சொல்லணும்.
பிறகு ஆசிரியர்கள் நாடகத்தின் அடிப்படையில் பல வினாக்களை உருவாக்கி குழந்தைகளிடம் வினாக்களை கேட்டு விடைகளை பெறலாம்.

நாடகம்: “நேர்மையான முயற்சி
காட்சிகள்:
காட்சி 1: டென்னிஸ் மைதானம்
காட்சி 2: நீதிபதி வீட்டில் உரையாடல்
காட்சி 3: திருமண நிகழ்வு
காட்சி 1: டென்னிஸ் மைதானம்
(இடம்: டென்னிஸ் மைதானம். முருகன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். நீதிபதி பார்க்கிறார்.)
நீதிபதி: (முகத்தில் ஆச்சரியத்துடன்) வாவ்! நீ மிகவும் நன்றாக விளையாடுகிறாய்! உன் பெயர் என்ன?
முருகன்: (மகிழ்ச்சியுடன்) என் பெயர் முருகன் ஐயா.
நீதிபதி: நீ இன்னும் என்ன செய்கிறாய்?
முருகன்: நான் வேலையில்லா பட்டதாரி. வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன்.
நீதிபதி: (சிந்தித்து) உனக்கு நான் ஏதேனும் உதவி செய்யலாமா?
முருகன்: நான் விலங்கியல் படித்து இருக்கிறேன்.

எனக்கு மீன்வளத் துறையில் ஒரு வேலை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
நீதிபதி: சரி. நீ நாளை காலை 9 மணிக்கு என் வீட்டிற்கு வா.
முருகன்: (மகிழ்ச்சியுடன்) நன்றி, ஐயா!
காட்சி 2: நீதிபதி வீட்டில் உரையாடல்
(இடம்: நீதிபதி வீடு. நேரம்: காலை 8.45. முருகன் நேரத்திற்கு முன்பாக வந்துவிடுகிறார்.)
(நீதிபதி முகம் மலர்கிறார்.)
நீதிபதி: (மனதில்) இந்த இளைஞன் நேரத்திற்கு முன்பாக வந்திருக்கிறான்! நல்ல பழக்கம்.
(கதவை திறக்கிறார்.)
முருகன்: காலை வணக்கம், ஐயா.
நீதிபதி: (பரிசோதனையாக) சரி, வேலைக்கான தொடர்பு எண் எனக்குத் தெரியாது. என் உதவியாளரிடம் கேட்டுப் பார்க்கிறேன்.
முருகன்: (விழிப்புடன்) இல்லை, ஐயா! அது 9876543210.
நீதிபதி: (ஆச்சரியத்துடன்) எப்படி தெரியும்?
முருகன்: (சிரித்துக்கொண்டு) ஐயா, நான் என் குறிப்பேட்டில் எல்லா முக்கிய தகவல்களும் எழுதி வைத்திருக்கிறேன்.
நீதிபதி: (மகிழ்ச்சியுடன்) மிக நன்று! உன் கவனத்துடன் செயல்படும் பழக்கம் உன்னை உயர்த்தும். உனக்கேற்ற வேலை கிடைக்க உதவுகிறேன்.
காட்சி 3: திருமண நிகழ்வு
(இடம்: திருமண மண்டபம். முருகனின் திருமணம் நடக்கிறது. நீதிபதி மணமகளிடம் பேசுகிறார்.)
நீதிபதி: மகளே, உன் கணவர் ஒரு நல்ல எதிர்காலம் பெறப் போகிறார். இவர் ஒரு நாள் உயர்ந்த பதவியை அடைவார்.
மணமகள்: (மகிழ்ச்சியுடன்) நிச்சயமாக, ஐயா!

(முடிவில், முருகன் IAS தேர்வு எழுதி கலெக்டராக பணியில் சேருகிறார்.)
வெற்றிக் கதை:
(Success Story)
திருச்சி மாவட்டம், பாதர் பேட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும்  சுய கற்றல் மைய  குழந்தைகள் எவ்விதப் பொருள் செலவு இல்லாமல் தாங்கள் கேட்ட கதையை நாடகமாக மாற்றி  தங்கள் கருத்துகளை விளக்குகிறார்கள். குழந்தைகளை ஊக்கப்படுத்தி வரும் பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் எம். தனலட்சுமி அவர்களுக்கும், குழந்தைகளுக்கு வழிகாட்டி வரும் பெற்றோர்களுக்கும் பாராட்டுக்கள்
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts