“குழு கற்றல் மூலம் தொடர்ச்சியான கல்வி வளர்ச்சி”.
S.சிவகுமார்,
முதல்வர் (பணி நிறைவு)
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும், காஞ்சிபுரம் மாவட்டம்,
Mob..6383690730.
குழு கற்றல் செயல்பாடுகள்
தா.பாதர்பேட்டை, அய்யர்குளம், கேசவனேரி உள்ளிட்ட கிராமங்களில், பெற்றோர்களின் ஆதரவுடன் குழந்தைகள் குழுக்களாக சேர்ந்து கற்றுக் கொள்கிறார்கள். பள்ளி நேரம் முடிந்த பிறகும், விடுமுறைகளிலும், தொடர்ந்து அவர்கள் தங்கள் கல்வியில் ஈடுபட்டு உள்ளனர்.

குழு கற்றலின் நன்மைகள்:
குழந்தைகள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கற்றலுக்கு உதவுகின்றனர்.
குழு விவாதங்கள் மூலம் குழந்தைகள் அவர்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்துகின்றனர்.
தொடர்ந்து கற்றலால் குழந்தைகளின் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது.

இந்த கற்றல் முறையை ஆசிரியர்கள் WhatsApp குழு மூலமாக கண்காணித்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகிறார்கள். இந்த முறையின் பயனாக, குழந்தைகளின் திறன் மேம்பட்டு, கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
நன்றி.













