• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரி செப்பர்டு-விரிவாக்கத்துறை மற்றும் திருச்சி குழந்தை யேசு மருத்துவமனை இணைந்து கரூர் தோகைமலை ஒன்றியம் தளிஞ்சி கிராமத்தில் 09.03.2025 இன்று ஒரு நாள் பொது மருத்துவ  முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரி செப்பர்டு-விரிவாக்கத்துறை மற்றும் திருச்சி குழந்தை யேசு மருத்துவமனை இணைந்து கரூர் தோகைமலை ஒன்றியம் தளிஞ்சி கிராமத்தில் 09.03.2025 இன்று ஒரு நாள் பொது மருத்துவ  முகாம் நடைபெற்றது.

Email :137

செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரி செப்பர்டு-விரிவாக்கத்துறை மற்றும் திருச்சி குழந்தை யேசு மருத்துவமனை இணைந்து கரூர் தோகைமலை ஒன்றியம் தளிஞ்சி கிராமத்தில் 09.03.2025 அன்று ஒரு நாள் பொது மருத்துவ  முகாம் நடைபெற்றது.  இம்முகாமை கல்லூரி இரண்டாம் ஆண்டு இளம் அறிவியல் வேதியியல்  மாணவர்கள்  ஏற்பாடு செய்தனர். செப்பர்டு-விரிவாக்கத்துறை முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்கள்  மாணவர்களுக்கு  ஒரு நாள் மருத்துவ முகாமிற்கான ஆலோசனைகளை வழங்கி இந்நிகழ்வில் தலைமை தாங்கினார்.

திருச்சி, குழந்தை யேசு மருத்துவமனையின் மருத்துவ முகாமிற்கான தலைமை நிர்வாகி அருட்சகோதரி ஆலிஸ் மற்றும் டாக்டர், விஜிலா, டாக்டர் ஜாக்குலின், டாக்டர் ஃபாபியோலா, டாக்டர் பவுலினா மற்றும் ஸ்டாப் நர்ஸ்கள் என பதினான்கு பேர் கொண்ட குழு சிகிச்சையளித்து மருந்து கொடுத்தனர்.

இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர் அலோசியஸ் மற்றும் இரண்டாம் ஆண்டு இளம் அறிவியல் வேதியியல்  மாணவர்கள்  ஏற்பாடு செய்திருந்தனர்.

இம்முகாமில் 100-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மூட்டு வலி, முழங்கால் வலி, தைராய்டு, நெஞ்சுவலி, இரத்த கொதிப்பு, அலர்ஜி, தோல் நோய்கள், சளி இருமல், சர்க்கரை நோய், சத்து குறைபாடு போன்ற நோய்களுக்கு சிகிச்சையும் ஆலோசனையும் பெற்று சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts