• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரியைப் பசுமை வளாகமாக  மாற்றுவதில் முக்கிய மைல்கல்!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரியைப் பசுமை வளாகமாக  மாற்றுவதில் முக்கிய மைல்கல்!

Email :8

செயின்ட் ஜோசப் கல்லூரியைப் பசுமை வளாகமாக  மாற்றுவதில் முக்கிய மைல்கல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவில் கல்லூரி அதிபர் பெருமிதம் கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாக்கும் உயரிய நோக்கத்தோடு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள அருள்தந்தை ஞானரத்தினம் பெயரிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச.  திறந்து வைத்தார்.
இந்த சுத்திகரிப்பு நிலையம், நாளொன்றுக்கு 3,50,000 லிட்டர்  கழிவுநீரைச் சுத்திகரிக்கும் அதிநவீன திறன் கொண்டதாகும். கல்லூரி வளாகத்தில் தினமும் உருவாகும் பயன்பாட்டு கழிவுநீரைச் சேகரித்து, அதனை நவீன முறையில் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் இந்த மையம் சிறப்பான கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுத்திகரிக்கப்படும் நீரானது கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்கள், செடிகள் மற்றும் பசுமைத் தோட்டப் பராமரிப்பிற்குப் பயன்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் நிலத்தடி நீர் மற்றும் நன்னீர் பயன்பாடு வெகுவாகக் குறைக்கப்பட்டு, கழிப்பறை மறுபயன்பாடு உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கு இந்நீர் மறுசுழற்சி செய்யப்படவுள்ளது. கழிவுநீர் வெளியேற்றத்தால் சூழலுக்கு ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்தி, சுத்திகரிப்பு, மறுசுழற்சி, நிலைநிறுத்துதல் என கடபடடறகற தூய்மையான சூழலை உருவாக்க உதவும் இத்திட்டம் பயன்படும்.
கல்லூரியைப் பசுமை வளாகமாக  மாற்றுவதில்இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அதிபர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம், சே.ச., அருள்தந்தையர்கள், பேராசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts