• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விளையாட்டு விழாவில்
    பொருளியல் துறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
தமிழ்நாடு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விளையாட்டு விழாவில்
பொருளியல் துறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.

Email :1173

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விளையாட்டு விழாவில்
பொருளியல் துறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 182 வது விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ் வரவேற்புரையாற்றினார்.

இவ்விழாவில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் இணை முதல்வர்  முனைவர் த.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவரும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் கூடுதல் செயலருமான திரு.ஏசுதாஸ் கென்னடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினர்.

கல்லூரியின் முன்னாள் மாணவரும் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளையோர் நல அலுவலருமான திரு.டேவிட் டேனியல் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று சிறப்பித்தார். 93 புள்ளிகளை பெற்ற பொருளியல் துறை புள்ளிகளின் அடிப்படையில் பணி முறை ஒன்று மாணவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டதை வென்றது.
பணிமுறை ஒன்று மாணவர்களுக்கான தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதுநிலை முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர் ஜெப்ரின் என்ற மாணவர் பெற்றார். பணிமுறை இரண்டு மாணவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆங்கிலத்துறை கைப்பற்றியது. பணிமுறை இரண்டு மாணவர்களுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை இளநிலை முதலாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் அஜய் என்ற மாணவர் பெற்றார்.
மாணவியருக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழாய்வுத்துறை கைப்பற்றியது. மாணவியருக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை இளநிலை மூன்றாம் ஆண்டு தமிழாய்வுத்துறை மாணவி அகல்யா என்ற மாணவி பெற்றார். 26 அணிகள் பங்கேற்ற அணிவகுப்பில் பணிமுறை ஒன்றில் வணிகவியல் துறை மாணவர்களும் மற்றும் உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறை மாணவர்களும் பெற்றனர். பணிமுறை இரண்டில் பி.ஓக் எஸ்.டி எஸ்.ஏ துறை மாணவர்களும்.  இரண்டாமிடத்தைப் பெற்ற வணிகவியல் மேதைமை இணைந்த மூன்று துறை மாணவர்களும் பெற்றனர்.
பரிசு பெற்றவர்களுக்கு விருந்தினர்கள் மற்றும் அருள்தந்தையர்கள் கோப்பைகளை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

நிறைவாக விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளரும், விளையாட்டு விடுதி இயக்குநருமான அருள்தந்தை இராஜசேகரன் நன்றியுரை வழங்கினார். தேசியகீதத்துடன் விழா சிறப்பாக நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை அருள்தந்தை இராஜசேகரன், உடற்கல்வி இயக்குநர் முனைவர் பிரேம் எட்வின், உடற்கல்வி உதவி இயக்குநர் முனைவர் ரெனில்டன் பிரீஸ், உடற்கல்வித்துறைத்தலைவர் திரு ஸ்ரீராம், முனைவர் ரமேஷ் ஆகியோர் விளையாட்டு விழாக்குழுவுடன் இணைந்து மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts