• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியர் தின விழா!
தமிழ்நாடு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியர் தின விழா!

Email :27

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியர் தின விழா!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே ச., கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம்,சே.ச.  இணை முதல்வர் முனைவர் த.குமார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

தம் கல்லூரி நாட்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்ட அவர், கல்லூரி மாணவர்களாகிய இளைஞர்கள் வாசித்திருக்க வேண்டிய நூல்கள் என்கிற அடிப்படையில் உலகின் தலைசிறந்த நூல்களை மேற்கோள்காட்டி இந்த நூல்கள் உருவாவதற்குத் தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு துணைபுரிந்து இருக்கின்றன என்பதையும் எடுத்துக்கூறி வியப்பில் ஆழ்த்தினார்.
பிற்பகலில் பணி முறை இரண்டு சார்பாக நடைபெற்ற விழாவில் ஜமால் முகமது கல்லூரி முதல்வர் முனைவர் ஜாகீர் உசேன்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேராசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் மாணவர்களுக்கு அறிவுரையையும் வழங்கினார். 

ஆசிரியர் சங்கத்தலைவர் முனைவர் டாமினிக், அலுவலகப் பணியாளர்கள் சங்கத்தலைவர் சேவியர் ஜோதி இளங்கோ, அருள் முனைவர் அருள் ஒளி, சே.ச., அருள் முனைவர் சி. மணிவளன், சே.ச. உள்ளிட்ட துணை முதல்வர்கள், கல்லூரியின் நுண்கலைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் விமல் ஜெரால்ட், முனைவர் கா.ஜான் கென்னடி மற்றும் மாணவர் பேரவையினர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளுக்கானப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்களின் இசைக்கச்சேரி, நடன நிகழ்ச்சிகள் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை மாணவர் பேரவையினர் மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts