• Home
  • தமிழ்நாடு
  • திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் மேத்தா சிறப்பு நிகழ்வு!
தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் மேத்தா சிறப்பு நிகழ்வு!

Email :28

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் மேத்தா சிறப்பு நிகழ்வு!

திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியரும் ‘மகாகவி’ கலை இலக்கிய காலாண்டிதழ் இணை ஆசிரியருமான முனைவர் ஜா. சலேத் ‘கவிவேந்தர் மு.மேத்தா’ என்கிற பொருண்மையில் சிறப்புரை நிகழ்த்தினார்.

சிறப்புரைக்குப் பிறகு திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க அமைச்சர்  தமிழவேள் பெ. உதயகுமார், துணைத் தலைவர் புலவர் இரா.வரதராசன், துணை அமைச்சர்கள்  முனைவர் அ. சையத் ஜாகீர் அசன், முனைவர் சு.செயலாபதி
மற்றும் மகாகவி இணை ஆசிரியர் முனைவர் ஜா.சலேத் ஆகியோர் இதழை அறிமுகம் செய்தனர்.

முன்னதாக முனைவர் செயலாபதி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். நிறைவில் புலவர் இரா.வரதராஜன், கருத்துரை வழங்கினார்.
இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ‘மகாகவி’ சிறப்பிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts