“போதை முடிவடையும்; வாழ்க்கை தொடங்கும்” – பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள கிருஸ்து ராஜ் கல்லூரியின் முதுகலை சமூகப் பணித்துறை மற்றும் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் இணைந்து, “Addiction Ends; Life Begins”

என்ற தலைப்பில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று (01.09.2026) நடத்தியது.



திருவெறும்பூர், முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி அரங்கில் காலை 11 மணி முதல் மதியம் வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி N. திருமறைச்செல்வி தலைமை வகித்தார்.

கிருஸ்து ராஜ் கல்லூரி சமூகப்பணித் துறைத் தலைவர் பேராசிரியர் S. இசபெல்லா சிறப்பு வளஆளராகக் கலந்து கொண்டு, போதைப்பொருட்களின் தீமைகள், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள், போதைப் பழக்கத்திலிருந்து விலகுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி A.விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலகத்தின் பெண்கள் மைய பாலின சிறப்பு நிபுணர் மற்றும் நிறுவன மேற்பார்வையாளர் திருமதி S. மெஹ்ருன் நிஷா நிகழ்வில் பங்கேற்று மாணவர்களுக்கு போதைப்பற்றி விழிப்புணர்வு மற்றும் பல செய்திகளை தெளிவாக விளக்கினார்.

இந்நிகழ்ச்சியை கிருஸ்து ராஜ் கல்லூரி சமூகப் பணித்துறை II ஆண்டு MSW மாணவர் திரு. L. பாபு ஒருங்கிணைத்தார். பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதுடன், ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான வாழ்க்கை முறையை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.













