இன்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தரங்கில் அறிவியல் இயக்க கருத்தாளர்களிடையே செப்டம்பர் 12 அன்று இரவு நடக்கும் பாலின சமத்துவ நடைபயணத் திற்கான இலட்சினையை த.அ.இ மேனாள் மாநிலத் தலைவர் எழுத்தாளர் மோகனா அவர்கள் வெளியிட த. அ. இ மேனாள் தலைவர் பேரா.முனைவர் தினகரன் & மாநிலப் பொதுச் செயலர் முகமது பாட்சா இருவரும் இணைந்து பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் தமுஎகச திருச்சி மாவட்ட மேனாள் தலைவரும் பாலின சமத்துவ நடை பயன வரவேற்புக் குழுத் தலைவருமான சிவ. வெங்கடேஷ் பாலின சமத்துவ பயண நடை நோக்கத்தை எடுத்துரைத்து தலைமை தாங்கினார் . த. அ. இ மாவட்ட துணைத்தலைவர் பேரா. முனைவர் சலாஹுதீன் முன்னிலையில் மாவட்டப் பொருளாளர் மாரிமுத்து நன்றி சொல்ல நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.












