• Home
  • தமிழ்நாடு
  • திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 183-ஆம் ஆண்டு விழா 28.08.2026 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளியின் தூலூஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 183-ஆம் ஆண்டு விழா 28.08.2026 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளியின் தூலூஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

Email :16

திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 183-ஆம் ஆண்டு விழா 28.08.2026 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளியின் தூலூஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியின் ஆண்டு விழா நிகழ்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இவ்விழாவிற்கு பள்ளியின் அதிபர் அருள் முனைவர். M. பவுல்ராஜ் சே.ச. தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் அருட் சகோதரர் .K. ஆரோக்கியசாமி சே.ச. மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் அருட்திரு V. ஜார்ஜ் சே.ச. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் முன்னாள் மாணவர்களான முனைவர் P.A. நரேஷ் M.Sc., M.Sc., M.Phil., M.B.A., LL.M., CERM, B.Ed., Ph.D., தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை மற்றும் உயர்திரு S. சிரில் அலெக்சாண்டர், MSW., நிர்வாக இயக்குநர், மேரி ஆன் அறக்கட்டளை, தமிழ்நாடு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளியின் முன்னாள் மாணவர் மன்ற தலைவர் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.
மாணவர்களின் கல்வி, அறிவுத்திறன், படைப்பாற்றல், கலைத்திறன் மற்றும் பல்வேறு தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த 183-ஆம் ஆண்டு விழாவும் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. பள்ளியில் 2025-2026ஆம் கல்வியாண்டில் கல்வி, இயக்கங்கள் மற்றும் பல நிகழ்வுகளில் சிறந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கேடயமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விழாவின் இறுதியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க செயலர் அவர்கள் நன்றி உரையை வழங்கினார்.

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் 183 ஆண்டுகால கல்விப் பாரம்பரியத்தை நினைவுகூரும் இவ்விழா, மாணவர்களின் திறமைகளுக்கு ஊக்கமும், அவர்களின் எதிர்காலப் பயணத்திற்கு புதிய நம்பிக்கையும் அளிக்கும் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts