• Home
  • தமிழ்நாடு
  • “*எனக்குப் பிடித்த மரம், அதை சிறப்பாக வளர்ப்பேன்*” என்ற  நிகழ்ச்சி  கிராம குழந்தைகள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

“*எனக்குப் பிடித்த மரம், அதை சிறப்பாக வளர்ப்பேன்*” என்ற  நிகழ்ச்சி  கிராம குழந்தைகள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.

Email :13

“*எனக்குப் பிடித்த மரம், அதை சிறப்பாக வளர்ப்பேன்*” என்ற  நிகழ்ச்சி  கிராம குழந்தைகள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி: செயின்ட் ஜோசப் கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளியின் விரிவாக்கத் துறையான செப்பர்ட்  சார்பில்,  குழந்தைகளுக்கு அவர்கள் பிடித்த மரக்கன்று வழங்கி மரக்கன்று வளர்ப்பதை ஊக்குவிக்கும் மற்றும்  வலியுறுத்தும் வகையில் “எனக்குப் பிடித்த மரம் திட்டம் ” (My Favourite ட்ரீ Project)

என்ற சிறப்பு நிகழ்ச்சி 26.08.2026 புதன்கிழமை காலை 10 மணியளவில் கலிமங்கலம் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.

“Roots for Tomorrow, Sustain Today, Inspire Forever” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, குழந்தைகள் அனைவருக்கும் அவர்களுக்கு பிடித்த மரக்கன்று வழங்கப்பட்டது. மரங்களைப் பாதுகாப்பதன் அவசியம், இயற்கை வளங்களைப் பேணுதல் மற்றும் எதிர்காலத் தலைமுறைக்கான பசுமையான சூழலை உருவாக்குதல் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு சொல்லு
விரிவாக்கத்துறை – செப்பர்டு  இயக்குநர் முனைவர் அருட்தந்தை T. சகாயராஜ், S.J. தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக செயின்ட் ஜோசப் கல்லூரி வேதியியல் துறை உதவிப் பேராசிரியர். திரு. ஆரோக்கிய தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கலிமங்கலம் ஊர் தலைவர் திரு. அலெக்ஸ் வாழ்த்துரை வழங்கினார் மற்றும் ஊர் முக்கியஸ்தர் செபஸ்தி கண்ணு கலந்து கொண்டார்.
வரவேற்புரையை வரலாற்றுத் துறை மாணவர் ஜேம்ஸ் வழங்கினார்.  நிகழ்ச்சியின் நிறைவில் வரலாற்றுத் துறை மாணவி செல்வி நன்றியுரை வழங்கினார்.

மரங்களை வளர்ப்பதும் பாதுகாப்பதும் ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு என்பதை வலியுறுத்திய இந்நிகழ்ச்சி, “மரங்களைப் போற்றுவோம்; இயற்கையைப் பாதுகாப்போம்; எதிர்காலத்தை வளமாக்குவோம்” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை வளர்ப்பு மற்றும் மரங்களின் அவசியம் குறித்த சமூக விழிப்புணர்வு மேலும் வலுப்பெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியில் கிராம குழந்தைகள் அனைவருக்கும் அவர்களுக்கு பிடித்த மரக்கன்று வழங்கப்பட்டது. இதில் சுமார் 35 கிராம குழந்தைகளும் 10 ஊர் பெரியோர்களும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts