செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆண்டு தியானம்!
நம் வாழ்வே இறைவேண்டல் – இறை வேண்டலின் தரம் உயர்த்துவோம் என்னும் பொருண்மையில் கத்தோலிக்கப் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஆண்டு தியானம் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

தியானத்தின் தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியம், சே.ச., இணை முதல்வர் முனைவர் த.குமார், ஆன்மீகக் குழு இயக்குனர் அருள்தந்தை சைமன் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி இயக்குநர் மற்றும் செயலர் அருள்தந்தை லூயிஸ் பிரிட்டோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.

தூத்துக்குடி மதுரை மாவட்ட அருள்தந்தை குமார் ராஜா இறை வேண்டலுக்கு துணை புரியும் நேரத்தைக் கூட்டுங்கள், தரத்தை அதிகரியுங்கள், இறைவேண்டல் பற்றிய பார்வையை விசாலப்படுத்துங்கள் என்கிற கருத்துக்களின் அடிப்படையில் ஆன்மீக தியானம் வழங்கினார்.

நிறைவில் கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் கூட்டுத் திருப்பலியுடன் ஆண்டு தியானம் நிறைவு பெற்றது. இத்தியானத்தில் கல்லூரியில் பணியாற்றாகிற கத்தோலிக்க கிறிஸ்தவப் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். தியானத்திற்கான ஏற்பாடுகளை வளாக ஆன்மீகக் குழு இயக்குனர் அருள்தந்தை சைமன் தலைமையிலான குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.












