• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183வது விளையாட்டு விழா!
தமிழ்நாடு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183வது விளையாட்டு விழா!

Email :17

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183வது விளையாட்டு விழா!

மத்திய மண்டலக் காவல் துறைத்தலைவர்
பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா விழா நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், இணை முதல்வர் முனைவர் த.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம் வரவேற்புரையாற்றி, சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.

மத்திய மண்டலக் காவல்துறைத்தலைவர் வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றார். ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அனைத்துத்துறை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றினார். தமது உரையில் போதைப்பழக்கம் உள்ளிட்ட பல சமூகத் தீமைகளுக்கு சரியான நிவாரணி விளையாட்டே. விளையாட்டு தனிநபருக்கு மட்டும் அல்ல சமூகத்திற்கும் என பல சான்றுகளைக் கூறி மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரை வழங்கினார்.

கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி சுங்கவரித்துறைக் கூடுதல் ஆணையரும் தூய வளனார் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கே.விஜயகிருஷ்ண வேலவன் உரையில் கல்லூரியின் அனுபவங்களை எடுத்துக் கூறி மாணவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்று சாதனைகள் படைக்க வாழ்த்தினார்.

தொடர்ந்து மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள், பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான சிறப்பு போட்டிகளும் நடைபெற்றன.

தனி நபர் சாம்பியன்ஸ் பட்டத்தை முதலாம் ஆண்டு ஆங்கில மாணவர் முத்துப்பாண்டி (பணிமுறை ஒன்று) முதலாம் ஆண்டு வணிக மேலாண்மை மாணவர் உபேஷ்ராகவ் (பணிமுறை இரண்டு) வேலன்சியா இமாகுலேட் (மாணவியர் பிரிவு) ஆகியோர் பெற்றனர்.

அணிவகுப்பில் முதலிடத்தை வரலாற்றுத்துறை அணியும் (பணிமுறை ஒன்று) வணிகவியல் மேதைமை துறை அணியும் (பணிமுறை இரண்டு) அணியும் பெற்றனர்.

புள்ளிகளின் அடிப்படையில் பணிமுறை ஒன்று மாணவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் பட்டதை பொருளியல் துறையும், பணிமுறை இரண்டு மாணவர்களுக்கான சாம்பியன்ஸ் பட்டத்தை உடற்கல்வியியல் துறையும், மாணவியருக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வணிகவியல் மேதைமைத் துறை உள்ளிட்ட மூன்று துறைகள் அடங்கிய அணி கைப்பற்றியது.

உடற்கல்வி இயக்குனர் பிரேம் எட்வின், உதவி உடற்கல்வி இயக்குநர் எஸ்.ரெனில்டன் பிரீஸ், முனைவர் விமல் ஜெரால்டு உள்ளிட்ட பேராசிரியர் பரிசு பெற்ற மாணவர்களின் பெயர்களை வாசிக்க அருள்தந்தையர்கள், விருந்தினர்கள் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தனர். நிறைவாக விளையாட்டுத்துறை இயக்குநரும். துணை முதல்வருமான அருள்முனைவர் அருள்ஒளி நன்றியுரையாற்றினார். தேசிய கீதத்துடன் விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts