• Home
  • தமிழ்நாடு
  • திருச்சிப் பேராசிரியருக்கு செந்தமிழ் செல்வர் விருது!
தமிழ்நாடு

திருச்சிப் பேராசிரியருக்கு செந்தமிழ் செல்வர் விருது!

Email :44

திருச்சிப் பேராசிரியருக்கு செந்தமிழ் செல்வர் விருது!

திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜா சலேத். படைப்பாளராகவும் ஆய்வாளராகவும் தமிழ் இலக்கிய உலகில் சிறப்புற  பணியாற்றி வருகிறார்.

மதுரை முத்தமிழ் நாட்டுப்புற கலைகள் ஆராய்ச்சி நிறுவனமும் மலேசியாவில் இயங்கும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து   “செந்தமிழ் செல்வர் விருது” என்னும் விருதை வழங்கியுள்ளனர்.

விருதுத் தகுதியுரை, சான்றிதழ், பொற்கிழி, பொன்னாடை, நூல் பரிசு ஆகியன  அடங்கிய இவ்விருதைப் பெற்ற பேராசிரியர் முனைவர் ஜா.சலேத்
கலையரங்கில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் சங்க விழாவில் பாராட்டப்பெற்றார். 

“தமிழ் இலக்கிய வரலாற்றில் அயலகக்கவிதை வடிவங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு ‘சுவையுணர் திறங்கொள்’ என்னும் ஆய்வு நூலை வெளியிட்டமையைப் பாராட்டியும், ‘வில்லனெல்லே’ எனும் பிரெஞ்சு கவிதை வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தமைக்காகவும் ‘செந்தமிழ்ச் செல்வர் விருது’
வழங்கி, பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது” என்கிற விருது தகுதியுரையை நந்தவனம் சந்திரசேகரன் வாசிக்க  சிறப்புத் தலைவர் எம்.ஜே. எஃப் அரிமா சௌமா இராஜரத்தினம், சங்கத் தலைவர் கவிஞர் இந்திரஜித், பொதுச் செயலாளர் ஜவகர் ஆறுமுகம், சிறப்பு விருந்தினர் அமெரிக்கன் பாப்பையா அகத்தியன் ஜான் பெனடிக்ட் ஆகியோர் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.   லயன் முகமதுஷபி, கவி.செல்வா, கவிஞர் சுமித்ரா மகாதேவன், மருத்துவர் லட்சுமி நந்தகுமார், யோகா விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts