தூய வளனார் கல்லூரியில் தமிழ் ஆய்வு மன்ற ஆய்வரங்க நிகழ்வு!
தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் இயங்கி வரும் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் அவர்கள் முன்னிலையில் முனைவர் சி. ஆரோக்கிய தனராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற

இந்த நிகழ்வில் செந்தமிழ்த் தொண்டர் நொச்சியம் ச. சண்முகநாதன் எழுதிய ‘செம்மொழித்தமிழ் – ஒரு பார்வை’ என்னும் நூலை முனைவர் ஆ இராஜாத்தி அவர்கள் ஆய்வு செய்து உரையாற்றினார்.


கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணனின் ‘போகிற போக்கில் ஒரு போதிமரம்’ என்கிற நூலை முனைவர் ஜா.சலேத் அவர்கள் அறிமுகம் செய்து உரையாற்றினார். எழுத்தாளர் இரா.முருக வேளின் ‘புனைபாவை’ நூல் குறித்த ஆய்வுரையை முனைவர் பட்ட ஆய்வாளரும் உதவிப் பேராசிரியருமான திருமிகு மா. ராஜா சமர்ப்பித்தார்.
இயக்குநர் சசியின் ‘நூறு சாமி’ திரைப்படத்தை முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவர் ச ஆசிக்டோனி திறனாய்வு செய்தார். ஆய்வரங்க ஏற்பாடுகள் முனைவர் ஆ.இராஜாத்தி மற்றும் பேராசிரியர் இ.யோகராஜ் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.












