69வது மத்திய தொழிலாளர்கள் கல்வி தினம்! இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தொழிலாளர்கள் கல்வி வாரியத்தின் மூலம் 69 வது மத்திய தொழிலாளர்கள் கல்வி தினம் 16.09.2026 அன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் திருவேங்கைவாயில் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
நோக்கம்:
அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்குதல் ஆகியவற்றின் வழியாக, நாட்டின் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் கண்ணியத்தையும் மேம்படுத்துவது.

சிறப்பு விருந்தினர்கள்:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடந்தது. மத்திய தொழிலாளர்கள் கல்வி வாரியத்தின் மதுரை மத்திய மண்டல இயக்குநர் டாக்டர் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். மத்திய தொழிலாளர்கள் கல்வி வாரியத்தின் மாநில பயிற்சியாளர் திரு . ஜவகர்லால் நேரு அவர்கள் கலந்துகொண்டு விளக்கவுரை ஆற்றினார்.

முப்பெரும் விழா:
69 வது தொழிலாளர்கள் கல்வி தினம், விழிப்புணர்வு மற்றும் காப்பீடு பதிவு முகாம் மற்றும் ஸ்ரமிக் மித்ரா அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் 125 நாட்கள் தொழில் வாய்ப்பை உருவாக்கி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நம் கிராமம் நம் முன்னேற்றம் VB-GRAM G திட்ட பயனாளிகளும் கிராமப் பொதுமக்களும் பதிவு செய்து பயன் பெற்றனர்.

மத்திய தொழிலாளர்கள் கல்வி தினம்:
இந்த நிகழ்ச்சி கிராமத்தில் நடைபெறுவது இதுவே முதல்முறை. 2023 ஆம் ஆண்டு முதல் மத்திய தொழிலாளர்கள் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியம் மட்டுமே தகுதிவாய்ந்த ஒரு அரசு நிறுவனம் ஆகும். சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு தென்னிந்திய பகுதிகளில் இவ்வாரியத்தின் பலன்கள் கிடைத்து வருவது பெருமைக்குரியது.
அடையாள அட்டை வழங்கும் விழா:
சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்ராமிக் மித்ரா என்று அழைக்கப்படும் தொழிலாளர்களின் நண்பர்களுக்கு ஸ்ரமிக் மித்ரா அடையாள அட்டை வழங்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கிராமங்களில் ஏழை எளிய மக்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக விபத்து காப்பீடு மருத்துவ காப்பீடு போன்ற பல்வேறு திட்ட பணிகளை செய்ய ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.


விழிப்புணர்வு மற்றும் காப்பீடு பதிவு முகாம்:
இத்திட்டம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒப்புதலோடும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வழிகாட்டுதலோடும் ஊராட்சி செயலர் மற்றும் மக்கள் நலப் பணியாளர்களின் பங்களிப்போடும் விழிப்புணர்வு மற்றும் பதிவு முகாம் நடந்தது. இம்முகாமில் மூலம் ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பதிவு செய்தனர்.
இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றியச் செயலர் திரு ராசு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அலுவலர் சசிகலா ஜெயச்சந்திரன், சுப்பிரமணியன், நவீன், கீதா, திருமதி. சுதாராணி, சிந்து நதி, வினிதா, லட்சுமி, தீபிகா, பாண்டி மீனா, சுதா, ரஞ்சிதா, அகல்யா, போன்ற தொழிலாளிகளின் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இம்முகாம் சிறப்புற நடக்க மதுரை மத்திய மண்டல இயக்குநர் டாக்டர் பிரபாகரன் ஒவ்வொரு நாளும் தொழிலாளிகளின் நண்பர்களை நெறிப்படுத்தி உற்சாகமூட்டினார். இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய தொழிலாளர்கள் கல்வி வாரியத்தின் மாநில பயிற்சியாளர் திரு . ஜவகர்லால் நேரு செய்திருந்தார்.














