• Home
  • தமிழ்நாடு
  • அனுபவங்களை சமூகத்திற்கான விழுமியங்களாக விட்டுச் சென்றவர் பேரறிஞர் அண்ணா!
தமிழ்நாடு

அனுபவங்களை சமூகத்திற்கான விழுமியங்களாக விட்டுச் சென்றவர் பேரறிஞர் அண்ணா!

Email :11

அனுபவங்களை சமூகத்திற்கான விழுமியங்களாக விட்டுச் சென்றவர் பேரறிஞர் அண்ணா!

பாரதிதாசன் பல்கலைக்கழக அண்ணா பிறந்தநாள் விழாவில் பேராசிரியர் பெருமிதம் பாரதிதாசன் பல்கலைக்கழக அண்ணா இருக்கை சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாக் கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் குழு உறுப்பினர் முனைவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் காளிதாசன் பங்கேற்று, வாழ்த்துரையாற்றி  தொடங்கி வைத்தார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் சிறப்பு  விருந்தினராகப் பங்கேற்று  பேரறிஞர் அண்ணா இளைய தலைமுறைக்கான கருவூலம் என்கிற பொருண்மையில் உரையாற்றினார்.  அண்ணாவின் பேச்சு, எழுத்து, திரையுலகந் பயணம், அரசியல் ஈடுபாடு அனைத்தும் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. அண்ணா தனது கொள்கைகளுக்காக எவ்விதச் சமரசமுமின்றி தொடர்ந்து களமாடியவர். அவரின் வாழ்க்கைப்பயணம் பல்வேறு சோதனைகளால் ஆனது எனினும் மனதை வளமையாக வைத்துக் கொண்டு ஒரு புதிய சமூகத்தை கட்டி எழுப்ப அயராத பாடுபட்டவர் என்கிற கருத்துக்களைப் பதிவு செய்தார்.

முன்னதாக பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடக்கத்தில் அண்ணா இருக்கை இயக்குனர் முனைவர் எட்வர்ட் வில்லியம் பெஞ்சமின் வரவேற்புரையாற்றினார். நிறைவில் முனைவர் தோலப்பன், நன்றி கூறினார்.  ஆங்கிலத்துறை, வரலாற்றுத்துறை,  உடற்கல்வியியல் துறை மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வாளர்கள்,  ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முனைவர் உள்ளிட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts