திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள துறைக்குடி ஊராட்சியில் இன்று சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மட்டும் ஆரம்ப சுகாதார நிலையம் நாகமங்கலம் இணைந்து மக்களுக்கு புற்றுநோய் பாதுகாப்பு மற்றும் தடுப்பு பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை திரு ராபின்சன் அவர்கள் வழங்கினார்.

அதனை தொடர்ந்து கிராம உதவி செவிலியர் அவர்கள் திருமதி கல்பனா அவர்கள் பெண்களுக்கு இன்று அதிகமாக வரக்கூடிய முக்கியமாக இரண்டு புற்று நோய்கள் கர்ப்ப வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் அதனைத் தொடர்ந்து இதனால் ஏற்படக்கூடிய தீமைகள் அதனை நாம் எப்படி கண்டறிவது என்பதை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தார் எடுத்துக்காட்டு கர்ப்ப வாய் புற்றுநோய் என்பது மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற விஷயங்கள் அதிகமாக இருக்கும் நாம் பயன்படுத்தக்கூடிய துணிகள் மற்றும் அதனை சுத்தமாக பயன்படுத்த வேண்டும், இது தொடர்ந்து ஏற்பட்டால் நாம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்று நாம் ஆய்வு செய்து கொண்டு அதன் அடிப்படையில் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் மார்பக புற்றுநோய் என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் அதிகமாக வருகிறது.

குறிப்பாக கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்கள் தன் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வில்லை என்றாலும் தாய்ப்பாலினால் கட்டுதல் போன்ற பிரச்சனை நாள் இந்த மார்பக புற்றுநோய் வருகிறது குறிப்பாக 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனைவரும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தங்கள் மார்பகத்தை பரிசோதனை செய்து கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும் அதே போன்று இன்றைய காலகட்டத்தில் நாம் உண்ணக்கூடிய உணவு முறை பழக்க வழக்கங்கள் நாம் பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள் அனைத்தையும் நான் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் குறிப்பாக இளம் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் ஒரு நாளைக்குமூன்று முறை நாப்கினை மாற்ற வேண்டும் அதற்காக பள்ளிகளில் இடமும் நாப்கினும் இலவசமாக தருகிறது நம் அரசாங்கம் ஆகவே சரியான விதத்தில் அதனை நாம் பயன்படுத்தவில்லை என்றால் குழந்தைகளுக்கு கர்ப்ப வாய் பிரச்சனை அதிகமாக வரும் என்பதையும் எடுத்துக் கூறினார்.
மேலும் ஏதேனும் பிரச்சினை இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்திலோ அல்லது என்னை தொடர்பு கொண்டால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதி கூறினார். இறுதியாக திருமதி ஜூலி அவர்கள் நன்றி உரை கூறினார். இதன் மூலமாக நாங்கள் பல விஷயங்களை அறிந்து கொண்டோம் என்றும் இது எங்கள் மக்களுக்கு கண்டிப்பாக தேவை என்றும் எடுத்துக் கூறினார்.
பிறகு இந்த நிகழ்வில் 30 நபர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தது.
திரு ராபின்சன் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட்.














