திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய அறிவியல் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் 28/02/2925 அன்று தேசிய அறிவியல் தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்க நிகழ்வில், நாங்குநேரி ஒன்றியம், கூந்தன்குளம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், டாக்டர் சர். சி.வி. ராமன், சர். ஐசக் நியூட்டன் ஆகியோரின் வேடமணிந்து மனிதச் சங்கிலியில் கலந்துகொண்டு விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.

தொடக்க நிகழ்ச்சியில் அறிவியல் மையத்தின் கல்வி அலுவலர் மாரி லெனின், மாவட்ட அறிவியல் அலுவலர் ச.மு. குமார், கூந்தன்குளம் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் ஜோனாத்தான், மற்றும் ஆசிரியர்கள் சங்கர நாராயணன், ஷாபா பிரான்சிபா, ராதா லெட்சுமி, சங்கரம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பள்ளி மாணவர்களும், பதாகையுடன் கல்லூரி மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று விழாவை மேலும் கண்கவர் செய்தனர்.

இந்த விழா, மாணவர்களுக்கு அறிவியல் மீது ஆர்வம் மற்றும் ஆராய்ச்சியுணர்வு வளர்க்கும் நோக்கில் சிறப்பாக அமைந்தது.












