• Home
  • தமிழ்நாடு
  • வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்வு!
தமிழ்நாடு

வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்வு!

Email :167

வெண்பாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் வெண்பாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ் கூடல் நிகழ்வு நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக வெண்பாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு தலைமை ஆசிரியர் லதா தலைமையில் நடைபெற்றது.

உதவி தலைமை ஆசிரியர் ராஜராஜன் பட்டதாரி ஆசிரியை மீனாம்பிகா, பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் ஸ்ரீதேவி வரவேற்பு பேசினார்.

சிறப்பு விருந்தினராக வட்டார வளமைய அலுவலர் அஸ்மா பீ பங்கேற்றார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மகேந்திரன் சிறப்பு உரையாற்றினார். ஆசிரியர் கனகராஜ் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் நடனம், திருக்குறளில் ஒப்புவித்தல், எழுத்துக்களை கண்டறிதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் சீதா, சுமதி, கௌரி மனோகரி, ஏஞ்சலின், வாசுகி, பத்மாவதி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts