• Home
  • தமிழ்நாடு
  • இன்று உலக மகளிர் மீதான வன்முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
தமிழ்நாடு

இன்று உலக மகளிர் மீதான வன்முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

Email :345

உலக மகளிர் மீதான வன்முறை எதிர்ப்பு தினம் 2024 முன்னிட்டு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI)  மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) இணைந்து 25.11.2024  இன்று உலக மகளிர் மீதான வன்முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட முனைவர். D.லாரா டேமிரிஸ் செல்லஜோதி, இணை பேராசிரியர், ஆங்கிலத்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் அவர்கள் பேசுகையில் வன்முறை  சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் பொழுதுபோக்கு நிகழ்வாக காட்சிபடுத்தப்பட்டு, அது சந்தைப் படுத்தப்படுகின்றது என்றும் இதில் இருந்து விடுபட பெற்றோர்கள் முன்உதாரணமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும் என்று கூறினார்.


நிகழ்ச்சியின் முன்னதாக முனைவர்.F.கார்ட்டர் பிரேம்ராஜ், உதவி பேராசிரியர், சமூகப்பணித்துறை, தலைவர்  அவர்கள் இந்நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி தெளிவாக எடுத்து கூறினார்.
மக்கள் மேம்பாட்டு வினையக ஆலோசகர் திருமிகு.J.ஜெய்பேபி அவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் வன்முறைகள் பற்றியும் அதில் இருந்து தற்காத்துக்கொள்ள உள்ள வழிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) பணிபுரியும் பகுதிகளில்

உள்ள சுய உதவிக்குழு பெண்கள், பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் மற்றும் PDI பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி முனைவர்.சரஸ்வதி இணை பேராசிரியர், சமூகப்பணித்துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, திருமிகு.முத்துக்குமார், திட்ட மேலாளர், PDI மற்றும் திருமிகு. ஜெசிந்தா ஒருங்கிணைப்பாளர், PDIPDI ஆகியோர் மூலம் தொகுத்து வழங்கபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts