தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக பங்கேற்பு!
முசிறி ஒன்றியம் கிருஷ்ணாபுரத்தில் இன்று நடைபெற்ற சாரதி பள்ளி தொடக்க விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக கலந்துகொண்டு,

அங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த திரைக்கலைஞர் மற்றும் இயக்குனர் திருமிகு பி. சமுத்திரக்கனி அவர்களுக்கும்,
பள்ளியின் தாளாளரும், திருச்சி மாவட்ட பொதுக்குழு உறுப்பினருமான திரு.கி.நவீன் அவர்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நினைவுப் புத்தகங்கள் வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டது.


நிகழ்வில் மாநிலச் செயலாளர் திரு.மு.மணிகண்டன், மாவட்டச் செயலாளர் பேரா.அருண்விவேக், இணைச் செயலாளர் திருமிகு.மகாலெட்சுமி, செயற்குழு உறுப்பினர் திரு.இளஞ்சேட் சென்னி மற்றும் முசிறி கிளைத் தலைவர் திரு.காளிதாஸ், செயலாளர் திரு.ஸ்ரீதரன், கிளை நிர்வாகிகள் திரு.சந்துரு, திருமிகு.பிரசன்னா, திரு.ரஞ்சன், தா.பேட்டை கிளைச் செயலாளர் திருமிகு.சின்னம்மா, தொட்டியம் கிளை செயலாளர் திரு.வரதராஜ், கிளை நிர்வாகி திரு.ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












