டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்தநாள்: செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் மலரஞ்சலி!
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவரும், கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவருமான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் செல்ஃபி பாயிண்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, அவரது வாழ்க்கை, இலட்சியங்கள் மற்றும் நாட்டிற்கான பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரியின் இயக்குநர் அருள்முனைவர் அந்தோணி சாமி சே.ச. தொடக்க உரையாற்றினார். அப்துல் கலாமின் வாழ்க்கைப் பயணம், நாட்டுப்பற்று, இளைஞர்களின் முன்னேற்றம் குறித்த அவரது சிந்தனைகள் மற்றும் உயர்ந்த இலட்சியங்களைக் கனவு கண்டு அவற்றைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, அருட்தந்தையர்கள், முன்னாள் மாணவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இறுதியாண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் திரு. ஜெஃப்ரி, அப்துல் கலாமின் வாழ்க்கை, சாதனைகள் மற்றும் இளைஞர்களுக்கு அவர் வழங்கிய ஊக்கமளிக்கும் சிந்தனைகள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். கடின உழைப்பு, விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் நாட்டிற்குச் சேவை செய்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
கல்லூரி முதல்வர் அருள்முனைவ ர் கு.ஆரோக்கியம், சே.ச. உறுதிமொழியை வழிநடத்தினார். அப்துல் கலாமின் இலட்சியங்களைப் பின்பற்றி, நாட்டின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க மாணவர்கள் உறுதியேற்றனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக, தொகுப்பாளர் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் சே.ச. செயலர் அருள் முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர் சே.ச., முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம், சே.ச, இணை முதல்வர் முனைவர் த.குமார் மற்றும் இயக்குநர் அருள்தநதை அந்தோணி சாமி சே.ச. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்துல் கலாமின் கனவு, அறிவியல் மனப்பான்மை, நேர்மை, உழைப்பு மற்றும் நாட்டுப்பற்று ஆகிய உயரிய பண்புகளை இளைய தலைமுறையினரிடம் வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி அமைந்தது. அவரது இலட்சியங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் தங்களது உறுதிப்பாட்டை முன்னாள் மாணவர் சங்கம் இந்நிகழ்வின் மூலம் வெளிப்படுத்தியது. விழாவில் துணை முதல்வர்கள் அருள்முனைவர் அருள்ஒளிஒளி, சே.ச. முனைவர் சார்லஸ், அருள் தந்தையர்கள், முனைவர் விமல் ஜெரால்டு உள்ளிட்ட பேராசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.












