• Home
  • தமிழ்நாடு
  • காரைக்குடியில் நடைபெற்ற கோலாகலமான குழந்தைகள் நாள் கொண்டாட்டம்!
தமிழ்நாடு

காரைக்குடியில் நடைபெற்ற கோலாகலமான குழந்தைகள் நாள் கொண்டாட்டம்!

Email :259

நேற்று 16.11.2024 காரைக்குடியில் யாக்கை மகிழ்வரங்கு,காரைக்குடி கவனகக் கலை மன்றம், நிமிர்வு கலையகம் நடத்திய குழந்தைகள் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி மிகச் சிறப்பாக  நடைபெற்றது.

இந்நிகழ்வில் குழந்தைகளுக்கிடையே போட்டி என்பதையும் தாண்டி ஒவ்வொரு குழந்தையின் தனித் திறமையையும் ஊக்குவித்து  சான்றிதழ்கள் விருதுகள், பதக்கங்கள் பொன்னாடைகள் என குழந்தைகள் அனைவரையும் உச்சி முகர்ந்து  கொண்டாடினார்கள்.

சிறப்பானதொரு ஆகச் சிறந்த முன்னெடுப்பு என்றே கூறலாம். மிகச் சிறப்பான ஏற்பாடு, நேர்த்தியான ஒருங்கிணைப்பு, மனதிற்கு நிறைவான நிகழ்ச்சியாக நடைபெற்றது. குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்கள் தனித்திறமைகளை மேடையில் அரங்கேற்றினர்.

மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்டம் கவனகக் கலை மன்றத் தலைவர் நல்லாசிரியர் சேவு முத்துக்குமார் அவர்கள் தலைமை வகித்தார். காரைக்குடி நேஷனல் கல்விக் குழுமத்தின் தாளாளர் சையது அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அரங்கம் மற்றும் திரைப்படப் படிப்புத்துறை துறைத் தலைவர் பேராசிரியர் மு. சுதா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி ஈனில் இலக்கிய அமைப்பின் நிறுவனர்,பேராசிரியரும், எழுத்தாளருமான கார்த்திகா கவின் குமார் குழந்தைமை குறித்தும், பெற்றோரியம் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

இத்தகைய  சிறப்பானதொரு ஏற்பாடு செய்த யாக்கை மகிழ்வரங்கு சிவ பஞ்சவன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக  மாணவர்கள், காரைக்குடி கவனகக் கலை  மன்றம், நிமிர்வு கலையகம்  ஆகிய அமைப்புகள் இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

சிறப்பு விருந்தினர்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தனித்திறமை உடைய மாணவர்களுக்கும் விருது வழங்கி, பொன்னாடை போர்த்தி பதக்கங்களுடன் சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts