• Home
  • தமிழ்நாடு
  • சாரண சாரணிய மாணவ மாணவர்களுக்கான இன்று ஒரு நாள் 04.12.2024 புதன்கிழமை வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு

சாரண சாரணிய மாணவ மாணவர்களுக்கான இன்று ஒரு நாள் 04.12.2024 புதன்கிழமை வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது.

Email :157

மதிப்புமிகு,
ஐயா,
வணக்கம்,
தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கம் திருச்சி வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட முசிறி கல்வி மாவட்டத்தில் 05 ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளிகள்

மற்றும் 02 மேல்நிலைப் பள்ளிகள் சேர்ந்த 226 சாரண சாரணிய மாணவ மாணவர்களுக்கான இன்று ஒரு நாள் 04.12.2024 புதன்கிழமை வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமில் சாரண இயக்க வரலாறு, சாரண சட்டம், சாரண உறுதிமொழி, வணக்கம் செலுத்தும் முறை, இறை வணக்கப் பாடல், கொடி பாடல், கயிற்று கலை போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

முகாம் நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் நலத்துறையின் திட்ட ஆலோசகர் திரு, க. ராஜா ஜெகஜீவன் ஐயா அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

மற்றும் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார் என்பதை மிக்க பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
உ. ஜெயமூர்த்தி,
மாவட்டச் செயலர்,
தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கம்
முசிறி கல்வி மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts