• Home
  • தமிழ்நாடு
  • தமி்ழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பம்பரம்சுத்தி ஊராட்சி இணைந்து  பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான பிரச்சார பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு

தமி்ழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பம்பரம்சுத்தி ஊராட்சி இணைந்து  பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான பிரச்சார பேரணி நடைபெற்றது.

Email :308

பம்பரம்சுத்தி ஊராட்சியில் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான பிரச்சார பேரணி


திருச்சி மாவட்டம் இலால்குடி தாலுகா, பம்பரம்சுத்தி ஊராட்சியில் தமி்ழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பம்பரம்சுத்தி ஊராட்சி இணைந்து  பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான பிரச்சார பேரணி நடைபெற்றது.


பம்பரம்சுத்தி ஊராட்சி சமூக சுய உதவிக்குழு பயிற்சியாளர் (CST) திருமதி.சத்யப்பிரியா  தலைமையில் நடைபெற்ற

இந்த பேரணியில் சிறப்பு விருந்தினர்களாக பம்பரம்சுத்தி ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமார் , அனைத்திந்திய மாதர் சங்க திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் திருமதி.விசாலாட்சி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.


வார்டு உறுப்பினர் திருமதி பிரியா ஆனந்த் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.
பேரணியில் பம்பரம்சுத்தி பொதுமக்கள், சுய உதவிக்குழு மகளிர்கள், கலந்து கொண்டு பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பிரச்சாரம்
மேற்கொண்டனர். தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி.ராஜகோகிலா பேரணியை ஒருங்கிணைத்தார்கள். பேரணி முடிவில் இணைந்த கரங்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் திருமதி.பெரியம்மாள் நன்றியுரை வழங்கினார்கள்.
சிறப்பு செய்தியாளர்,
இலால்குடி க.ரெங்கநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts