திருச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக முன்கூட்டிய விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிக்க வேண்டுகிறோம், மக்கள் சக்தி இயக்கம்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை (27.11.2024)ஃபெங்கல் புயலாக மாறும்.
புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை.
அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என அறிக்கை வந்துக் கொண்டு இருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் மாலையில்(25.11.24)பள்ளியிருந்து வீட்டுக்கு குழந்தைகள் நனைந்து கொண்டே சென்றனர். இனிமேலாவது தொடர் மழை பெய்து வரும் நேரங்களில் பள்ளி குழந்தைகளுக்கு முன்கூட்டிய விடுமுறை மாவட்ட ஆட்சியர் அளிக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.











