இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி, திருவரம்பூர் தாலுகா கிளை சார்பில் 39-ஆவது தேசிய கண் தான இரு வார விழாவை முன்னிட்டு, கண் தானம் செய்த

குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா இன்று 11.11.2024 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ் வழங்கி மற்றும் பாராட்டி கௌரவித்தார்.
இவ்விழாவை இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி, திருவரம்பூர் தாலுகா கிளை, தலைவர் திரு. K. செல்வராஜ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கண் தானம் செய்த
குடும்பத்தார்கள், 12.12.2023 M. சகுந்தலா, மகள் R. சுமதி, 02.01.2024 S. ராஜம்மாள், மகன் S. நமச்சிவாயம், 04.01.2024 R. வெங்கடேசன், மகன் V. தட்சிணாமூர்த்தி, 08.06.2024 M. வேதவல்லி
மகன் M. ரவி, 29.06.2024 S. M. கருப்பையா மகன் K. பழனிகுமார் ஆகியோரை திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. மா. பிரதீப் குமார் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தலைவர் K. செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை பேட்டியின் மூலம் எடுத்துரைத்தனர்.












