திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் இணைந்து 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு வாசிக்கும் பழக்கத்தை வலுப்படுத்தும் நூலகம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலக வளாகத்தில் நடைபெற்றது.
புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரை ஆற்றினார் நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலகச் சேவையானது மாணவர்களுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துகிறது. அனைத்து தரப்பினருக்கும் சுயகல்வி மற்றும் முறையான கல்விக்கு துணை நிற்றல். தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை
உருவாக்குதல் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுதல்.
பாரம்பரிய கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கலைகள், அறிவியல் சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.
நடத்து கலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல்.
அனைத்து தரப்பினருக்குமான கலை, இலக்கிய, கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பங்கெடுத்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு நூலகம் செயல்படுகிறது.
நூலகங்களில் தரமான நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளன. நூலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கு ஆதார் அட்டை நகலுடன் புத்தகத்திற்கு காப்புத் தொகை ஆண்டு சந்தா செலுத்த வேண்டும் என்றார்.
திருச்சி பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று துறை முதுகலை மாணவர்கள் அரிஸ்டோ வசந்தகுமார், திவாகரன், கிஷோர், லோகேஷ்வரன், இசாக். கிஷோர் குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.











