• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி தமிழ்ச் சங்கத்தில் இன்று மாலை முனைவர் கலையரசியின் சங்க கால மகளிர், உரையாடல்!
தமிழ்நாடு

திருச்சி தமிழ்ச் சங்கத்தில் இன்று மாலை முனைவர் கலையரசியின் சங்க கால மகளிர், உரையாடல்!

Email :310

திருச்சி தமிழ் சங்கத்தின் நவம்பர் மாத பொழிவாக இன்று மாலை 22.11.2024  வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் உதயகுமார் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்கள். வரவேற்புரையை துணை அமைச்சர் முனைவர் பேராசிரியர் செயலாபதி நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக முனைவர் கரு. கலையரசி உதவிப் பேராசிரியர் தமிழாய்வுத்துறை ஜமால் முகமது கல்லூரி திருச்சி அவர்கள் சங்க கால மகளிர் என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்.


அவர் கூறியதாவது சங்க கால மகளிர் கல்வியிலும் கேள்வியிலும் ஞானம் பெற்று விளங்கினார்கள். காதலையும் வீரத்தையும் ஒருசேரப்பார்த்தார்கள் நன்னெறி பிறழாமல் வாழ்ந்தார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல விளையாட்டுகளை ஆடியும் இயல் இசை நாடகம் என்ற முத் தமிழையும் நன்கு கற்றறிந்து வாழ்ந்தார்கள்.

நல்ல புதல்வர்களைப்பெற்று நல்வழியில் வளர்த்து பெருமை சேர்த்தார்கள் என்றும் ஆடவர்க்கு இணையான பங்களிப்பை அவர்கள் இல்லறத்தில் நடத்தி வெற்றி பெற்றார்கள் என்றும்.

விருந்தோம்பல் பண்பையும் விட்டுக்கொடுத்து வாழ் தலையும் நன்கு ஆற்றினர் என்றும் ஒன்று பட்ட கணவன் மனைவியின் காதல் வாழ்வையும் கண்முன்னே நிறுத்தினார்.

இவை இன்னும் மேலான செய்திகளையும் தொகுத்து வழங்கினார்.
அவர் தந்த செய்திகள் அனைத்தும் சங்க கால மகளிரின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியது போல் இருந்தது.
நன்றி உரையை அமைச்சர் உதயகுமார் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts