தமிழ்நாடு

பேரின்பம் பெற்றிடுவோம்!

Email :289

பேரின்பம் பெற்றிடுவோம்
————————————————–
தென்றல் சுடுவதில்லை
     தேன்பாகு கசப்பதில்லை
வெண்பனி கொதிப்பதில்லை
      விண்மதி தகிப்பதில்லை.

மலர்மணம் துறப்பதில்லை
      மழலைமுகம் மறப்பதில்லை
சுடர்ஒளி குறைவதில்வை
      சுற்றும்பூமி விரைவதில்லை.

அதனதன் சிறப்புகள்
      எதனிலும் தாழ்வதில்லை
மனிதனின் செயல்கள்மட்டும்
      மாறிமாறி வீழ்வதேனோ?

ஆறாம் அறிவுக்கு
       அகிலத்தில் மதிப்புயென்ன?
ஐந்துக்கும் பத்துக்கும்
      ஆலாய்ப் பறப்பதென்ன?

தனக்கென்று ஒருபாதை
      தனித்துவமாய்க்
                            கொள்ளாமல்
பிணக்குற்று வாழுவதை
      பெருமையென
                           யாருரைப்பர்?

கற்ற கல்வியினைப்
     புவிவாழ்வில் பற்றிடுவோம்
பெற்ற வாழ்வினில்
     பேரின்பம் பெற்றிடுவோம்.

வணக்கத்துடன்:
வீ.கோவிந்தசாமி,
திருச்சிராப்பள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts